உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

கரூர்: லாலாப்பேட்டை அருகே, கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் நாகராஜ், 29, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 6ல் இரவு ரமேஷ் என்பவரது வீட்டு முன், அமர்ந்து பேசிக் கொண்டி-ருந்தார். அப்போது அங்கு சென்ற சங்கர், 34, என்பவர் முன் விரோதம் காரணமாக, நாகராஜை கத்தியால் குத்தி விட்டு, தப்பி ஓடினார். இதுகுறித்து, நாகராஜ் கொடுத்த புகார்படி, லாலாப்-பேட்டை போலீசார், பிள்ளாப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த, சங்கரை கைது செய்ய முயன்றனர். அப்போது, சங்கர் தப்பி ஓட முயன்றதால், கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை