உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மண் கடத்தல் லாரி பறிமுதல்

மண் கடத்தல் லாரி பறிமுதல்

மண் கடத்தல்லாரி பறிமுதல்பவானி, நவ. 28-அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி கிராமத்தில், மண் கடத்துவதாக மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் கவிதா உள்ளிட்டோர், அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். குறிச்சி அருகே கருங்கன்னிகரட்டூரில் இருந்து, ராமாட்சிபாளையம் செல்லும் வழியில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்திய டிரைவர் தப்பி ஓடினார். சோதனையிட்டதில், லாரியில் இரண்டு யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை