| ADDED : ஜூலை 02, 2024 07:45 AM
கரூர்; கரூர் அருகே, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், கடைகளை அகற்ற கோரியதால், ஒருவர் தீக்குளிக்க முயன்-றதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் வளாகத்தில், அதே பகுதியை சேர்ந்த ஐந்து குடும்பத்தினர், பல ஆண்டுகளாக துளசி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவில் வளாகத்தில் ஐந்து கடைகளை கட்டி வாடகைக்கு விட, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதையடுத்து, கோவில் வளாகத்தில் துளசி கடை நடத்தி வருபவர்களை, காலி செய்யும்படி அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதை கண்டித்து, நேற்று மதியம் ஐந்து குடும்பத்-தினர் கோவில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ராம்குமார் என்பவர் மண்-ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில், இருந்தவர்கள் ராம்குமாரை காப்பாற்-றினர். தான்தோன்றிமலை எஸ்.ஐ., தில்லைக்க-ரசி உள்ளிட்ட போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டவர்களிடம், கோவில் நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கோவில் வளா-கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.