மேலும் செய்திகள்
மகன் மாயம்; தாய் புகார்
24-May-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 61, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 35, பெயின்டர். கடந்த 7ம் தேதி மாலை, 4:00 மணியளவில் வீட்டில் இருந்த கார்த்திக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
24-May-2026