உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நேர்முக தேர்வுக்கு சென்ற மகன் மாயம்: தாய் புகார்

நேர்முக தேர்வுக்கு சென்ற மகன் மாயம்: தாய் புகார்

கரூர்: சென்னைக்கு நேர்முக தேர்வுக்கு சென்ற, மகனை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.கரூர், ரெட்டிப்பாளையம் வசந்தம் நகரை சேர்ந்த, திருப்பதி என்ப-வரது மகன் சரண், 21; பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியர். இவர் கடந்த, 2 இரவு சென்னைக்கு வேலைக்காக, நேர்முக தேர்வுக்கு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சரண் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சரணின் தாய் சசிகலா தேவி, 42, போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !