பள்ளி சிறுவனை பாராட்டிய எஸ்.பி.,
கரூர், கரூர் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த, பள்ளி சிறுவனை, எஸ்.பி., ஜோஸ் தங்கையா பாராட்டினார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் முகமது ரூபியான், 14. பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல், தீ பிடித்தால் தானாக அணைக்கும் கருவி, ெஹல்மெட் அணிந்தால் மட்டும், டூவீலர்களை இ யக்கும் கருவி உள்ளிட்ட, ஆறு வகையான கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.இதற்காக, மாணவர் முகமது ரூபியான், 40 விருதுகளும், 18 பதக்கங்களும், 26 சான்றுகளையும் பெற்றுள்ளார். இதையறிந்த, கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையா, மாணவர் முகமது ரூபியானை நேற்று, கரூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.