வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி
கரூர்: கரூரில், பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இங்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கமளித்தனர். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள், வெவ்வேறு இடங்களில் வாக்குகளை வைத்திருப்பவர்களின் பெயர்களை நீக்க சொல்ல வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்களை சேர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்-டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரிவு மாநில துணை தலைவர் மகுடபதி, மாவட்ட பொது செயலர் செல்வராஜ், மாவட்ட செயலர் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.* அரவக்குறிச்சி அருகில் பள்ளப்பட்டியில் ஓட்டுச்சாவடி முக-வர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலர் உமாதேவி, மாவட்ட பொருளாளர் இளங்-கோவன், மாவட்ட துணை தலைவர் விக்டோரியா வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.