புகழூர் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கரூர்: புகழூர், நகராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு களப்பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், அம்மா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.நகராட்சி தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார். 150க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், டெங்கு காய்ச்சல் தடுப்பு களப்பணியாளர்களுக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமில், நகராட்சி ஆணையாளர் ேஹ மாவதி, சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ், டாக்டர்கள் அமுதா, சாந்தி, பிசியோதெரபி டாக்டர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.