மேலும் செய்திகள்
37வது மாநில அளவிலான சதுரங்க போட்டி பரிசளிப்பு
08-May-2025
கரூர், கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், பணியாளர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. மேலாண்மை இயக்குநர், சந்தீப் சக்சேனா தலைமை வகித்தார். கடந்த, 2 மாதங்களாக கிரிக்கெட், வாலிபால், தடகள, பேட்மிட்டன், பால் பேட்மின்டன், வளையபந்து, டென்னிஸ், கேரம், சதுரங்கம், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. மேலும், புகையிலை பழக்கத்தை விளைவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டி நடந்தது.இப்போட்டியில் வெற்றி பெற்ற, 350 ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.காகித நிறுவனத்தின் செயல் இயக்குநர் (இயக்கம்) யோகேந்திர குமார் வர்சனே, பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
08-May-2025