உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவஸ்தை

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவஸ்தை

கரூர், டிச. 22-க.பரமத்தி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில், குளம் போல் தேங்கியுள்ள மழை நீரால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர், ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் பாதிக்கப்படும் போது, ஆரியூர், பரமத்தி, முன்னுார், அத்திப்பாளையம், மோளபாளையம், காட்டுமுன்னுார் உள்ளிட்ட பகுதியிலிருந்து தினமும், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் க.பரமத்தி கால்நடை மருத்துவமனைக்கு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கரூர்--கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாகத்தின் போது, கால்நடை மருத்துவமனை வளாக இடம், 5 அடிக்கும் மேல கையக்கப்படுத்தப்பட்டது. அதனால், வளாகத்தில் இருந்த மழைநீர் வடிகால் இடிக்கப்பட்டது.அதன்பின், புதிய வடிகால் அமைக்கவில்லை என்பதால், அன்று முதல் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால், மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரம் கடந்த நிலையிலும், தண்ணீர் வடியாமல் கழிவுநீராக மாறி விட்டது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என டாக்டர்கள் புலம்புகின்றனர்.மேலும் விவசாயிகளும், சிரமப்பட்டு கால்நடைகளை அழைத்து வர வேண்டியுள்ளது. எனவே, க.பரமத்தி கால்நடை மருத்துவமனை வளாகத்தில், குளம் போல தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த மருத்துவமனை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை