உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், கரூர் மாவட்டத்தில் இன்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இதில், பள்ளப்பட்டி நகராட்சியில், 13வது வார்டுக்கு பள்ளப்பட்டி ஹபீப் ஷாதி மஹாலிலும், க.பரமத்தி வட்டாரம் கூடலுார் கிழக்கு மற்றும் கூடலுார் மேற்கு ஆகிய பஞ்சாயத்துகளுக்கு, எம்.ஜி.ஆர். நகர் வீரக்குமார் மண்டபத்திலும், கரூர் மாநகராட்சியில், 42வது வார்டுக்கு, தான்தோன்றிமலை நாயுடு மஹாலிலும், தாந்தோணி வட்டாரம், வெள்ளியணை பஞ்.,க்கு குமாரபாளையம் சமுதாய கூடத்திலும், குளித்தலை வட்டாரம் ராஜேந்திரம் மற்றும் குமாரமங்கலம் ஆகிய பஞ்.,களுக்கு ராஜேந்திரம் எஸ்.என்.எஸ்., திருமண மண்டபத்திலும் முகாம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி