மேலும் செய்திகள்
விண்ணப்பம் வழங்கும் பணி இன்று துவக்கம்
08-Jul-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரத்தில் உள்ள, 15 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி துவங்கியது. செயல் அலுவலர் கிருஷ்ணன் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கினார். மேலும் முகாமில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பிறகு, மக்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முழுமையாக இருக்கும் பட்சத்தில், அரசின் திட்டம் மக்களுக்கு கிடைக்கும் வகையில் சேவை செய்யப்படுகிறது. விண்ணப்பம் படிவம் வழங்கும் பணி வரும் 13 வரை நடக்கிறது.
08-Jul-2025