உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், கரூர் மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில், க.பரமத்தி வட்டாரத்தில் கோடந்துார், தென்னிலை தெற்கு ஆகிய பஞ்.,களுக்கு தென்னிலை லட்சுமி மகாலிலும், கடவூர் வட்டாரத்தில் தென்னிலை, வாழ்வார்மங்கலம் ஆகிய பஞ்.,களுக்கு தென்னிலை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நுாலக கட்டடத்திலும், தோகைமலை வட்டாரத்தில், சின்னையம் பாளையம், கழூகூர் ஆகிய பஞ்.,களுக்கு அ.உடையாப்பட்டி பி.எல்.எப்., கட்டடத்திலும், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., 8, 9, 12, 13, 14, 15- வார்டுகளுக்கு, அக்ரஹாரம் பி.எஸ். திருமண மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !