உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது. கரூர் மாநகராட்சி, 21, 35 வது வார்டுக்கு ஆசாத் ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டடத்திலும், குளித்தலை வட்டாரம் கே.கே.பேட்டை, வதியம் ஆகிய பஞ்சாயத்து களுக்கு கே.பேட்டை சமுதாயக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி