உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில அளவிலான சதுரங்கம் அரவக்குறிச்சி மாணவி தேர்வு

மாநில அளவிலான சதுரங்கம் அரவக்குறிச்சி மாணவி தேர்வு

மாநில அளவிலான சதுரங்கம்அரவக்குறிச்சி மாணவி தேர்வுஅரவக்குறிச்சி, அக். 11-மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அரவக்குறிச்சி குறுவளமைய போட்டியில், சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்ற அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி பூவிதா, கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவிக்கு, கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் ஜெயலட்சுமி சான்றிதழை வழங்கி பாராட்டினார். மேலும் வெற்றி பெற்ற மாணவி, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர், ரூபா ஆகியோரை தலைமை ஆசிரியர் சாகுல் அமீது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை