உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில அளவில் வினாடி-வினா டிச.,21ல் தேர்வு போட்டிகள்

மாநில அளவில் வினாடி-வினா டிச.,21ல் தேர்வு போட்டிகள்

மாநில அளவில் வினாடி-வினா டிச.,21ல் தேர்வு போட்டிகள்கரூர், டிச. 19-மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கான தேர்வு போட்டிகள் வரும், 21ல் நடக்கிறது.கன்னியாகுமரியில் உள்ள, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி வினா போட்டி வரும், 28ல் விருதுநகர் மாவட்டத்தில் நடக்கிறது. இந்த போட்டிகளில், கரூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும், ஒன்பது போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் எழுத்து தேர்வு வரும், 21 மதியம், 2:00 மணியளவில் கரூரில் நடக்கிறது. இந்த போட்டி, 1 மணிநேரம் எழுத்து தேர்வு போட்டியாக நடக்கும். 50 வினாக்கள் கொண்டது.போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை மாலை, 6:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தங்களது அலுவலக, பள்ளி அடையாள அட்டையை தேர்வு மைய அறை கண்காணிப்பாளரிடம் கட்டாயம் காண்பிக்க வேண்டும். தொடர்ந்து விபரம் பெற, கரூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணனை - 99437-02300, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்டஅலுவலர் சிவராமனை - 97888 58701, முதன்மை கல்விஅலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை)- தமிழ்ச்செல்வியை, 73730 03102, முதன்மை கல்விஅலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சக்திவேலை, -73730 03103 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை