உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை

அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சியில், வடக்கு தெரு, காமராஜ் நகர், மாரியம்மன் கோவில் தெரு, அம் மன் நகர், பள்ளிவாசல் தெரு, கலைவாணர் தெரு, பாவா நகர், பொன் நகர், மார்க்கெட் தெரு, சுப்ரமணி சுவாமி கோவில் பின்புறம், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.இந்த தெருநாய்கள், சாலையில் செல்லும் சிறுவர், சிறுமியர், முதியவர்களை கண்டால் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். சிலரை கடித்து விடுகின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால், விபத்தில் சிக்குகின்றனர். இதனால், அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ