உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், பொது வேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆயத்த மாநாடு நடந்தது.எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் அப்பாசாமி தலைமை வ-கித்தார். தொழிலாளர் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் நிர்ண-யிக்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியு-றுத்தி, மே 20ல் வேலை நிறுத்தம் நடக்கிறது.போராட்டம் குறித்து முன்னறிவிப்பு செய்து, நோட்டீஸ் கொடுப்பது, விரிவான பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோ-சிக்கப்பட்டது.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவனந்தம், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் குப்புசாமி, ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்-பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை