திடீர் சாரல் மழை
கரூர்:புகழூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று திடீரென, சாரல் மழை பெய்தது.தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் கரூர் அருகே புகழூர் வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம், 1:00 மணி முதல், 2:00 மணி வரை புகழூர், நொய்யல், உப்புபாளையம், குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஓரம்புபாளையம், நல்லிகோவில், புன்னம் சத்திரம், தவிட்டுபாளையம், பாலதுறை, காகிதபுரம், தளவாப்பாளையம், தோட்டக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், ஏற்பட்ட குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.