உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காளியப்பனூர் சாலையில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி

காளியப்பனூர் சாலையில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி

கரூர்;கரூர் காளியப்பனூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் போதிய, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் திறந்த வெளியில் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் செல்கின்றனர். இரவு நேரத்தில் சாலையில் நிலை தடுமாறி விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அப்பகுதியில் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், காளியப்பனுார் பகுதிகளில், தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை