மேலும் செய்திகள்
பெண்களுக்கு மிரட்டல் வாலிபர் கைது
15-Feb-2025
குளித்தலை,: குளித்தலை அடுத்த எம்.புதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் சிறும்பாயி, 42; விவசாய கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 13 மதியம், 3:30 மணிக்கு ரத்தினம் என்பவரது தோட்டம் அருகே, துணிகளை துவைக்க சென்றார். அங்கு பழைய கால-னியை சேர்ந்த கோவிந்தராஜன், 28, நவீன்குமார், 28, நின்று கொண்டிருந்தனர். அப்போது, சிறும்பாயிக்கும், கோவிந்தரா-ஜூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கைகலப்பாக மாறி-யுள்ளது. மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காய-மடைந்த சிறும்பாயி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்ந்தார். லாலாப்பேட்டை போலீசார், வழக்குப்பதிந்து கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.
15-Feb-2025