உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தர்மபுரி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கல்பனா, மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.இதில், கள பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். நில அளவை துறையில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் நில அளவர் நியமனத்தை கைவிட வேண்டும். புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர் நியமனத்தை கைவிட வேண்டும். உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். * கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன் விளக்கி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் வரவேற்றார். கோட்டத்தலைவர் மாவீரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை