அரவக்குறிச்சி அரசு பள்ளியில் துாய்மை பாரத இயக்க போட்டி
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், துாய்மை பாரத இயக்க போட்டி நடந்தது.'துாய்மையே சேவை' என்ற தலைப்பின் கீழ், துாய்மை பாரத இயக்க போட்டி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தொடங்கி வைத்தார். இதில், ஓவியம், கட்டுரை, பாட்டு, பேச்சு, கவிதை போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், தன் சுத்தம் பேணுதல், வகுப்பறை சுத்தம், பள்ளி சுத்தம், வீட்டு சுத்தம், தெருவில் துாய்மை குறித்து, மாணவர்களிடம் எடுத்து கூறப்பட்டது. கழிவறை சென்ற பின், சோப்பு போட்டு கை கழுவுதல், உணவு உண்ணும் முன்னும், பின்னும் கை கழுவுதல், தினசரி குளியல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். மகிழ் முற்றச்செயலாளர் ஷகிலா பானு நன்றி தெரிவித்தார்.