உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்துக்கு 4.50 லட்சம் பனை விதைகள் இலக்கு; கலெக்டர்

கரூர் மாவட்டத்துக்கு 4.50 லட்சம் பனை விதைகள் இலக்கு; கலெக்டர்

கரூர்: ''கரூர் மாவட்டத்திற்கு, 4.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை சொட்டை குளத்தில் வனத்-துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சியை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.பின், அவர் கூறியதாவது:ஒரு கோடி பனை விதைகள் நடும் நடும் பணி என்ற பெயரில், தமிழக அரசின் துறைகளுடன் இணைந்து தனியார் அமைப்புகள் பணியை மேற்கொள்ள உள்ளனர். காவிரி கரையில் பனை விதை நடும் பணியில், ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையின் இருபுறமும், 416 கி.மீ., தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பட்ட பனை விதைகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில், உதவி செயலி மற்றும் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு, 4.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்-ணயிக்கப்பட்டுள்ளது. அதில், சொட்டை குளக்கரையோரத்தில், 350 பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை