உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் கரூர் நகரில் போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் கரூர் நகரில் போலீஸ் பாதுகாப்பு

கரூர்:காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக, கரூரில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதல் எதிரொலியாக, தமிழகத்தில் பல நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வகையில், கரூரில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, துாப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி