உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 1,29,292 மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம் வழங்கல்: கலெக்டர்

1,29,292 மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம் வழங்கல்: கலெக்டர்

கரூர், ''கரூர் மாவட்டத்தில் மொத்தம், 890 பள்ளிகளில் பயிலும், 1,29,292 மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். கரூர் மாநகராட்சி, குமரன் நடுநிலைப் பள்ளியில் புதிய பாடபுத்தகங்கள் உள்பட கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் தங்கவேல் புத்தகங்களை வழங்கி கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, 751 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் வழியில், 36,301 மாணவ, மாணவியர், ஆங்கில வழியில், 5,048 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என, 140 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில், 73,827 மாணவ, மாணவியர், ஆங்கில வழியில், 14,116 மாணவ, மாணவியருக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.மொத்தம், 890 பள்ளிகளில் பயிலும், 1,29,292 மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், புத்தக பைகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் சுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை