உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடை முன் நிறுத்தியிருந்த பைக் மாயம்

கடை முன் நிறுத்தியிருந்த பைக் மாயம்

குளித்தலை, குளித்தலை அடுத்த தண்ணீர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 32. இவர் தனக்கு சொந்தமான பல்சர் பைக்கை கடந்த அக்., 20ல் சேங்கல் ஐயங்கார் பேக்கரி முன் இரவு 8:00 மணியளவில் நிறுத்தி விட்டு டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது கடையில் ஏற்பட்ட தகராறால், மாயனுார் போலீசார் பிரச்னை குறித்து விசாரிக்க சக்திவேலை அழைத்து சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை