உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்கரூர், நவ. 5-கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில தலைவர் சண்முகம் தலைமையில், முடிகணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, நிர்வாகிகள் பாலுகுட்டி, ரமேஷ் உள்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ