உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடை மழையால் நிரம்பியது பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை

கோடை மழையால் நிரம்பியது பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை

கரூர், கோடை மழையால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி உள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு காலை, 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. பாசன வாய்க்காலில், 25 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் திறப்பு இல்லை. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 47.34 அடியாக இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம், கரூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், தடுப்பணை நேற்று நிரம்பியது. கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு மாலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 206 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கதவணையில், 745.52 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ