அடிப்படை வசதிகள் செய்து தரணும் கணபதி நகர் மக்கள் எதிர்பார்ப்பு
கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில், மழை காலங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக தேங்கும் அவல நிலை உள்ளது.கரூர் மாநகராட்சி, சுங்க கேட் அருகே கணபதி நகர், கலைஞர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகு-தியில் மழைநீருடன், வீடுகளில் இருந்து கழிவு நீர் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கணபதி நகர், கலைஞர் நகர் பகுதியில், தார் சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுக-ளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக தார்சாலை போட, கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்-ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது. பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல புதிதாக, அமைக்-கப்பட்ட பிளாட்பாரம் தடையாக உள்ளது.இதனால், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில், புகுந்து வீடுகளுக்கு செல்கிறோம். இதனால், சுங்க கேட் பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை.இவ்வாறு தெரிவித்தனர்.