மேலும் செய்திகள்
துணை முதல்வருக்கு அமைச்சர் வாழ்த்து
30-Sep-2024
குளித்தலை: முதல்வர், அமைச்சர் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜலிங்கம், ராஜ்குமார், 36. இவர்கள் இருவரும், தமிழக முதல்வர் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரை கீழ்த்தரமான போஸ்டர் போட்டு, போலி பேஸ்புக் கணக்கு வாயிலாக, அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்திருந்தனர். இது குறித்து கடவூர், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் ராஜலிங்கம், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர். ராஜலிங்கம் தலைமறைவாக உள்ளார்.
30-Sep-2024