ஆசிரியரிடம் கையெழுத்து பெற்றுமோசடியில் ஈடுபட்டவர் கைது
குளித்தலை: குளித்தலை, கலப்பு காலனியை சேர்ந்தவர் மறைந்த மாஜி ராணுவ வீரரின் மனைவி சங்கீதா, 44. குப்பாச்சிபட்டி யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். வைகைநல்லுார் கோட்டைமேடு குடிதெருவை சேர்ந்தவர் ராஜா, 40. இவர். சங்கீதாவின் பூர்வீக சொத்தை விற்று தருவதாக கூறி, கையெழுத்து பெற்று தனியார் பைனான்ஸில் கடன் பெற்று, அதன் மூலம் கார் வாங்கி உள்ளார்.காருக்கு உரிய மாதாந்திர தவணை தொகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதாவிடம் பைனான்ஸ் நிறுவனத்தினர் மாத தவணை கட்டச் சொல்லியுள்ளனர். இதுகுறித்து ராஜாவிடம் சங்கீதா விளக்கம் கேட்டபோது, ஆத்திரமடைந்த அவர் சங்கீதாவை தகாத வார்த்தையால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.சங்கீதா அளித்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.