தலைமையாசிரியர் விபரீத முடிவு
கரூர், நவ. 6-கரூர் அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் ராம் நகரை சேர்ந்தவர் தங்கராஜ், 51; கடவூர் நல்லுரான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த, 2017ல் குடல்வால் அறுவை சிகிச்சை நடந்தது.ஆனால், வயிற்று வலி குணமாகவில்லை. இதனால், மனம் உடைந்த தங்கராஜ் கடந்த, 3ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தங்கராஜ் மனைவி ரேவதி, 39, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.