உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பள்ளத்தால் அவதி

சாலை பள்ளத்தால் அவதி

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர். அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே, ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாய்க்காக பள்ளம் பறித்தனர். அதனை கான்கிரீட் கலவை கொண்டு சாலையை சரி செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, இரண்டு அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தவறி விழுகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி செல்வதால், வாகனம் பழுதாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை