உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்; நுங்கு, தர்பூசணி, இளநீர் விற்பனை ஜோர்

மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்; நுங்கு, தர்பூசணி, இளநீர் விற்பனை ஜோர்

கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த, 12 நாட்களாக சராசரியாக, 100 டிகிரி பாரன்ஹீட் முதல், 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும், வரும் மே, 4ல் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. இதனால், பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், இளநீர், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய், முலாம் பழம் ஜூஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். இதனால், விற்பனை சூடுபிடித்துள்ளது.மேலும், கோடைகாலத்தில் களிமண் பானையில் வைக்கப்பட்ட நீரை பொதுமக்கள் விரும்பி அருந்துவது வழக்கம். அக்னி நட்சத்திரம் விரைவில் தொடங்குகிறது. அதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து, களி மண் பானைகள் கொண்டு வரப்பட்டு, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார், கோவை சாலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண பானை, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையிலும், பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானை, 300 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், தென்னை மரங்கள் அதிகளவில் சாகுபடி இல்லை. இதனால், திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து, கரூருக்கு இளநீர் கொண்டு வரப்படுகிறது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், கரூரில் இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு இளநீர், 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முலாம் பழம் ஒரு கிலோ, 30 ரூபாய்க்கும், தர்பூசணி கிலோ, 40 ரூபாய்க்கும், மூன்று பீஸ் நுங்கு, 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ