மேலும் செய்திகள்
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
01-Nov-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியில் இருந்து தீர்த்தம்பாளையம் சாலை வழியாக கரூர், திருச்சி நெடுஞ்சாலை பிரிவு வரை வாகனங்கள் சென்று வருகின்றன. தீர்த்தம்பாளையம் சாலை நடுவில் பாசன வாய்க்காலில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். பாலத்தின் தடுப்பு கட்டைகள் சிதிலமடைந்து மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பாலத்தின் தடுப்பு கட்டைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Nov-2024