மேலும் செய்திகள்
திருக்குறள் கருத்தரங்கம்
01-Aug-2025
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், திருக்குறள் முற்றோதல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.திருக்குறள் முற்றோதல் இயக்கம் அக்., 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 50 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. இதனை ஆசிரியர்கள் பயிற்றுவித்து, மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் இயக்கத்திலும் மற்றும் தமிழக அரசு நடத்தும் குறள் ஒப்புவித்தல் போட்டிகளிலும் பங்கேற்று பரிசு பெறுவர். மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தகத்தை வட்டாரக்கல்வி அலுவலர் சகுந்தலா வழங்கினார்.உறுதுணையாக இருந்த மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முருகேசன், ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் சாய்பிருந்தா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். ஆசிரியர்கள் ராபியா பசரி, காயத்ரி, ரொகையாபீவி, கவிதா, கிருஷ்ணவேணி, புவனேஸ்வரி, ஜோதிமணி, ஷபான்தஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டனர். மகிழ்முற்ற செயலர் பட்டதாரி ஆசிரியர்ஷகிலாபானு நன்றி கூறினார்.
01-Aug-2025