திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்
திருவள்ளுவர் உருவச்சிலைவெள்ளி விழா கருத்தரங்கம் கரூர், டிச. 25-கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம், மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடந்தது. அதில், அன்பும், அறனும் என்ற தலைப்பில், குளித்தலை தமிழ் பேரவை தலைவர் மணிமாறன் பேசினார். திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், குளித்தலை கிளை நூலகர் செல்வராஜ், டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வடிவேல், மாவட்ட மைய நூலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர்.