முள்செடிகளை அகற்ற வேண்டும்
கி.புரம், பஞ்சப்பட்டி குளத்தில் இருந்து, உபரி மழைநீர் வெளியேறி புங்காற்று நெடுகை வழியாக கோட்டமேடு வரை செல்கிறது. உபரிநீர் கோட்டமேடு பிலாறு வடிகால் வாய்க்காலில் கலக்கிறது. துாய்மை செய்யப்பட்ட புங்காற்று நெடுகை முழுதும் முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மழைநீர் வரும் போது, முள் செடிகளால் வாய்க்காலுக்கு உபரிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுகை பகுதிகளில் வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.