உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் முள் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரம் முள் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி கிராமத்தில், சாலையோரம் வளர்ந்த முள் செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டுப்பட்டி வரகூர் கிராமத்தில் இருந்து தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது மேட்டுப்பட்டி முதல் வரகூர் வரை, சாலையோரம் இரு புறமும் முள் செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முள் செடிகளை அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை