உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் முள் செடிகள் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் முள் செடிகள் வாகன ஓட்டுனர்கள் அவதி

கிருஷ்ணராயபுரம், கொம்பாடிப்பட்டி நெடுஞ்சாலையில், முள் செடிகள் வளர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை முதல் பாலப்பட்டி மேட்டுப்பட்டி பிரிவு சாலை வரை நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் லாலாப்பேட்டை, அய்யர்மலை பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது கொம்பாடிப்பட்டி அருகில், சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். முள் செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகள் மீது படுவதால் சிரமப்படுகின்றனர். சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி