மேலும் செய்திகள்
சிரமப்படும் கிராம மக்கள்
05-Aug-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி கிராம நுாலக சாலை, பாலப்பட்டி பிரிவு சாலை இணைப்பு வரை உள்ளது. இந்த சாலை வழியாக, வேங்காம்பட்டி, பாலப்பட்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது, சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில் முள் செடிகள் பட்டு காயம் ஏற்படுத்தி வருகிறது. கண்களில் பட்டு பெரும் விபத்து ஏற்படும் முன், பஞ்., நிர்-வாகம் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள முள் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
05-Aug-2025