உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சரக்கு லாரி-கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

சரக்கு லாரி-கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, சரக்கு லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூவர் படுகாயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ், 34. இதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ரஞ்சித்குமார், 17. இவரது தாய் பெரியக்காள், 45. இவர்கள் மூவரும், மாருதி ஆல்டோ காரில் கரூரிலிருந்து, சின்னதாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். சூடாமணி பஸ் நிறுத்தம் அருகே கார் சென்றபோது, எதிரே விருதுநகர் மாவட்டம், நாகலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பொன்ராஜ், 34, என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த, மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரையும் மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.விபத்து குறித்து, சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ