உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபரை கத்தியால் மிரட்டிய சிறுவர் உட்பட மூவர் கைது

வாலிபரை கத்தியால் மிரட்டிய சிறுவர் உட்பட மூவர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த வீரியம்பட்டியை சேர்ந்த தினேஷ், 21, கரூர் டெக்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். கடந்த 16 இரவு, 8:30 மணியளவில் வீரியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த திண்டுக்கல் மாவட்டம், ஆனைப்பட்டியை சேர்ந்த தனபால், 22, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவர் சேர்ந்து, எதற்காக இங்கே நிற்கிறாய் என கேட்டு தகாத வார்த்தை பேசி, மறைத்து வைத்திருந்த நீண்ட கத்தியை எடுத்து உன்னை கொலை செய்து விடுவோம் என, மூன்று பேரும் மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து தினேஷ் கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு சிறுவர்கள் உட்பட மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்