உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூதாட்டியிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு

கரூர், புகழூர் அருகே செம்படாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மரகதம், 69. இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த, 30 வயது வாலிபர் கதவைத் தட்டி உள்ளார். மரகதம் கதவை திறந்துள்ளார். திடீரென வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை