உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் பழுதால் சிக்கிய மூவர்

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் பழுதால் சிக்கிய மூவர்

ஈரோடு :ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் லிப்ட்டில் சிக்கிய மூவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண்-3-4க்கு செல்ல படிக்கட்டு, எஸ்கலேட்டர் மட்டுமின்றி லிப்ட்டிலும் பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் செல்லலாம். நேற்று மதியம், 1:00 மணிக்கு திருநெல்வேலி வரை செல்லும் ரயில் சென்ற பின், ஈரோட்டை சேர்ந்த சந்தோஷ், 17, கமலேஷ், 17, நிசாந்த், 18 ஆகிய மூவர் லிப்ட்டில் பிளாட்பார்மில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர்.அப்போது லிப்ட் பழுதாகி பாதி வழியில் நின்றது. லிப்ட்டில் சிக்கி கொண்ட மூவரும் செய்வதறியாது திகைத்தனர். தகவல் அறிந்த மூவரின் உறவினர்கள், ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சென்று, 1 மணி நேரம் போராடி, லிப்ட்டை கீழே இறக்கி மூவரையும் மீட்டனர். இதனால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ