மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
14-Sep-2024
கரூர்: உலக நன்மை வேண்டி, க.பரமத்தி வரதராஜபெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவ விழா நடந்தது.க.பரமத்தி, கடைவீதியில் வரதராஜபெருமாள் கோவிலில், உலக நன்மைக்காக திருகல்யாண உற்சவம், நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரத-ராஜபெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்-புச்சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ-பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்-சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருகல்யாண உற்சவ விழா நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
14-Sep-2024