மேலும் செய்திகள்
வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
26-Apr-2025
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், பொது வேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் அப்பாசாமி தலைமை வ-கித்தார். தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் கேள்விக்-குறியாக்கும் வகையில் மத்திய சட்டங்களை, நான்கு சட்டங்க-ளாக சுருக்கி, அமலாக்க முயற்சியை கைவிட வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியு--றுத்தி, நாளை வேலை நிறுத்தம் நடக்கிறது. இதுதொடர்பாக ஆலோனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவனந்தம், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பழனி-சாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டசெயலாளர் வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Apr-2025