உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மக்கள் தொகை கணக்கெடுப்பு கள பணியாளர்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு கள பணியாளர்களுக்கு பயிற்சி

குளித்தலை:குளித்தலையில், நேற்று மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தாசில்தார் சந்தான செல்வன் பயிற்சியை தொடங்கி வைத்தார். தனி தாசில்தார் ஜெயவேல், துணை தாசில்தார் தீபத்திலகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு கலைக்கல்லுாரியை சேர்ந்த ஐந்து முனைவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மற்றும் கையாளும் விதம், கணினியில் பதிவு செய்தல் தொடர்பாக பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !