உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வைரமடை ஸ்டாப்பில் அரசு பஸ் நிற்காததால் அவதி

வைரமடை ஸ்டாப்பில் அரசு பஸ் நிற்காததால் அவதி

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், கோவை தேசிய நெடுஞ்சா-லையில் அமைந்துள்ளது. மாவட்ட எல்லை பகு-தியான வைரமடை பஸ் ஸ்டாப்பில், அரசு பஸ்கள் முறையாக நின்று செல்லாததால், இப்ப-குதி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரு-கின்றனர்.தென்னிலை, வைரமடை மற்றும் அதனை சுற்-றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் கரூர், உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு அரசு பஸ்-களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில், சில அரசு பஸ்கள் நிற்காமல் நேரடி-யாக கடந்து செல்வதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்காது என கூறி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பஸ்சை நிறுத்த மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்-டுகின்றனர்.இதனால், பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில், நடந்தே செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. எனவே, வைரமடை பஸ் ஸ்டாப்பில், அனைத்து அரசு பஸ்களும் கட்டாயம் நின்று செல்ல, போக்-குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை